தெங்குமரஹாடா-ட்ரெக்கிங் பிரியர்களின் சொர்க்கபூமி
தெங்குமரஹாடா-ட்ரெக்கிங் பிரியர்களின் சொர்க்கபூமி
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் வட்டம், பவானிசாகரிலிருந்து சுமார் 28 km தொலைவில் அமைந்துள்ளது தெங்குமரஹாடா . பல ஊர்களுக்கு சென்று பல சுவாரஸ்ய தகவல்களை தெரிந்துகொண்டிருப்போம். நம் ஊருக்கு அருகே உள்ள சொர்கபூமியை பற்றி பார்ப்போம். சத்தியமங்கலம் வனப்பகுதியை ஓட்டி உள்ளது இக்கிராமம். இக்கிராமத்தில் ஏறத்தாழ ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன.
பவானிசாகரிலிருந்து ஒரு நாளுக்கு இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மண்சாலைதான் அதனால் நான்கு சக்கர ஜீப்புகளை பயன்படுத்தலாம். வாகனங்கள் மற்றும் பேருந்துகள் மாயாற்றின் கரையோரத்தில் நிறுத்தப்படும். மாயமாக தண்ணீர் அதிகரிப்பதால் இந்த ஆறு ‘மாயாறு’ எனப்படுகிறது. பரிசலில் கரையை கடக்கலாம் அல்லது தண்ணீர் குறைவாக இருக்கும் நேரங்களில் நடந்தே செல்லலாம்.
ட்ரெக்கிங் மற்றும் சுற்றுலாவின் போது யானைகள் ,சாம்பார்மான்கள், புள்ளிமான்கள், மற்றும் பல விலங்குகளை பார்க்கலாம். அதிர்ஷ்டம் இருந்தால் புலியை கூட பார்க்கலாம். பாறு கழுகுகள் தெங்குமரஹாடாவின் மற்றொரு அதிசியம். சுற்றுலா செல்பவர்கள் சொந்த வாகனத்தில் செல்வது நல்லது. தெங்குமரஹாடா வனப்பகுதியில் ஹெஜஹட்டி கணவாய் பகுதியில் திப்புசுல்தான் பயன்படுத்திய பாலம் ,திப்புசுல்தான் படைவீரர்களின் சமாதிகளும்,‘ஆதி கருவண்ணையர் பொம்மதேவியார்’ கோயிலும் உள்ளது.
சொர்கபூமியை சென்றுபாருங்கள்………….
Source : ”Erode200” written by THARUN K T In ChuttiVikatan.
#lovelyplace#tigerzone#trekking