செப்டம்பர் 7-யை எதிர்நோக்கி
செப்டம்பர் 7-யை எதிர்நோக்கி
இவ்வுலகில் உள்ள அனைவரும் நம் இந்தியாவின் சாதனைக்காக காத்துக்கொண்டுஇருக்கிறார்கள். இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது.அதுதான் செப்டம்பர் 7. சந்திரயான்-1 யை அடுத்து சந்திரயான்-2 ஜூலை 22ஆம் தேதி 2.43pm மணியளவில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து நிலவை நோக்கி ஜி. எஸ். எல். வி மார்க் III ஏவுகலன் மூலம் ஏவப்பட்டது.
இந்தப் பயணத்தின் மூலம்தான் இந்தியா தனது விண்வெளி ஆய்வில் அடுத்த கட்டத்தை எட்டிப்பிடிக்கவிருக்கிறது என்று கூறலாம். இம்முறை சந்திரயான்-2 ஆர்மிட்டர், லேண்டர், ரோவர் ஆகியவற்றுடன் செலுத்தப்பட்டது. சந்திரனை எட்டிய பிறகு அது சந்திரனிலிருந்து எப்போதும் 100 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும் வகையில் சந்திரனை சுற்ற ஆரம்பிக்கும். அதன் பின்னர் சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து இறங்கு கலம் தனியே பிரிந்து கீழ் நோக்கி இறங்க ஆரம்பிக்கும்.
சந்திரயான் – 2 சந்திரனில் இறக்கம்
சந்திரனில் இறங்குவது என்பது மிக சிக்கல் பிடித்த விஷயம். சந்திரனில் மட்டும் காற்று மண்டலம்இருந்தால் பாராசூட் மூலம் சுலபத்தில் இறங்கி விடலாம். இறங்கு கலம் தரையில் இறங்கிய பிறகு அதிலிருந்து ஆய்வுக் கலம் வெளிப்படும். இது ஆறு கால்களைக் கொண்டதாகும். இது தானாகவே அங்குமிங்குமாகச் செல்லக்கூடியதாகும்.
அத்துடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் பிறப்பிக்கும் கட்டளைக்கு ஏற்பவும் இது செயல் படும். சந்திராயனின்(2) ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டுமே.செப்டம்பர் 7-க்காக காத்திருக்கிறோம்.
Picture Courtesy : news18
Feature imageCourtesy :msnnews