சத்தியமங்கலம் வனப்பகுதி
சத்தியமங்கலம் வனப்பகுதி
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் வனப்பகுதியை சுற்றிப்பார்க்க தற்போது “வண்ண பூரணி” என்னும் திட்டம் உள்ளது. இத்திட்டத்தை பற்றி பலருக்கு தெரிவது இல்லை. இத்திட்டத்தை தெரியப்படுத்தும் வகையில் இந்த வலைப்பதிவு எழுதப்பட்டது.
Picture courtesy : TN forest department
புலி, சிறுத்தை, காட்டெருமை, செந்நாய் குரங்குகள், மான்கள் மற்றும் பல விலங்குகள் உள்ளன. அவற்றை பார்க்க மற்றும் ரசிக்க இந்த உலா மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இந்த வனப்பகுதி 2013 ஆம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
Picture courtesy: Ekaraitamilkalanjiyam
பவானிசாகர் வனச்சரகத்தில் தெங்குமரஹாடா செல்லும் சாலையில் உள்ள மாயாற்றுப்படுகை, ஆதிகருவண்ணராயர் கோயில் மற்றும் திப்புசுல்தான் காலத்தில் கட்டப்பட்டப் பாலம் ஆகியவற்றைப் பார்க்கும் வகையிலும், தலமலை வனச்சரகத்தில் திம்பம் முதல் தலமலை வரை 23 கிலோமீட்டர் தூரமுள்ள அடர்ந்த வனச்சாலையிலும், தாளவாடி வனச்சரகத்தில் கொங்கள்ளி வனப்பகுதியில் உள்ள எத்துகட்டி முதல் கண்காணிப்பு கோபுரம் வரையிலும், வனசுற்றுலா திட்டத்தில் பயணிகளை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புலிகள் காப்பகத்தைச் சுற்றிப் பார்க்கலாம். இந்த சுற்றுலாவிற்கு கட்டணமாக 400ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
ஆன்லைன்பதிவிற்கு: https://www.str-tn.org.in/
picture courtesy (featured image) : clubmahindra